எங்கள் குடிநீருக்கே தண்ணீர் பத்தாது.! இதுல எங்க தமிழகத்துக்கு தரத்து.! ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார்!

Published : Oct 31, 2023, 06:40 AM ISTUpdated : Oct 31, 2023, 06:42 AM IST
எங்கள் குடிநீருக்கே தண்ணீர் பத்தாது.! இதுல எங்க தமிழகத்துக்கு தரத்து.! ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார்!

சுருக்கம்

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி  திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.

15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் கர்நாடக துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தண்ணீர் திறக்க முடியாது என கூறியுள்ளார். 

தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி  திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறக்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன.

இதையும் படிங்க;- இப்போதைக்கு நீர் தருகிறோம்.. ஆனால்.? கண்டிஷன் போட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

இந்நிலையில், கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- நீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் கே.ஆர்.எஸ்., கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை. எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: இதுதான் காரணம் - மத்திய அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு