எடப்பாடி இல்லாத அதிமுக ஒருநாள் உருவாகும், கட்சியும், சின்னமும் ஓபிஎஸ் கைக்கு வரும் - முன்னாள் எம்எல்ஏ பரப்பு

By Velmurugan s  |  First Published Oct 30, 2023, 11:26 PM IST

எடப்பாடி இல்லாத அதிமுக ஒரு நாள் உருவாகும் அன்று கட்சியும் சின்னமும் ஓபிஎஸ் கையில் வரும் என்று புதுச்சேரியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் எம்எல்ஏ பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி அதிமுகவின் ஓ.பி.எஸ் அணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் முதலியார் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, ஓம் சக்தி சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தென்னந்தோப்பில் தனி குடும்பம்; உறவினர்களின் எச்சரிக்கையால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

Latest Videos

அப்போது பேசிய அவர் ஒற்றுமையாக இருந்த அதிமுகவை மற்றவர்கள் ஏளனம் செய்யும் அளவிற்கு எடப்பாடி வழி வகுத்து விட்டார். அவர் ஒருவர் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவின் ஒன்றறை கோடி தொண்டர்களை வீணடித்து விட்டார். எடப்பாடி நோக்கி சட்டம் நெருங்கிக் கொண்டு வருகிறது. அவருக்கு கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. எடப்பாடி இல்லாத அதிமுக 2024-ல்  உருவாகும் அன்று கட்சியும், சின்னமும் ஓபிஎஸ் கையில் வரும்.

ஓசூரில் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்த அதிகாரிகள்

தான் போட்டியிட்ட நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்திருக்கிறேன். மீண்டும் அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வேன் என்றும் உறுதியளித்தார். செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலியார் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

click me!