சரக்கை விற்கும் பணத்தில் உரிமைத்தொகை..! குடும்ப தலைவனை இழந்து குடும்ப தலைவிக்கு ரூ.1000 தேவையா..?- பாஜக

By Ajmal Khan  |  First Published Sep 2, 2022, 8:05 AM IST

நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திமுக தேர்தல் வாக்குறுதி

சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது, குறிப்பாக பால் விலை குறைப்பு, பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு, மகளிர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், சிலிண்டர் விலை குறைப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் எனஅறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு பொதுமக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இதனையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், பால்விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற  கையெழுத்திட்டு அதிரடி காட்டினார். ஆனால் பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மாதம் ரூ.1000 உதவி தொகை தொடர்பான அறிவிப்பும் வெளியாகவில்லை, திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆன நிலையில் எப்போது இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்தது.

Tap to resize

Latest Videos

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..!

உரிமைத்தொகை எப்போது..?

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விளக்கம் அளித்தார். அதில், வருகிற 5-ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அப்போது டெல்லியை போல் தமிழகத்திலும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அன்றைய தினமே அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவியர்களுக்கு மாதந்தோறும் 1000/- ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.  சில தாய்மார்கள் கேட்டார்கள். உரிமைத் தொகை என்னவாயிற்று? மாதம் ரூபாய் 1000 கொடுக்கிறேன் என்று சொன்னீர்களே. வரும், வரும். நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம், விரைவில் அதையும் சரி செய்து நிச்சயமாக, உறுதியாக அதையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் கலைஞருடைய மகன், சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின் என தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ஸ்.. அசால்டாக தப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சரக்கை விற்று உரிமைத்தொகையா..?

நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தேர்தலுக்கு முன்னர் 'கஜானா காலி' என்று சொல்லி வாக்கு சேகரித்த போது நிதி நிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை? (1/3)

— Narayanan Thirupathy (@Narayanan3)

இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின். தேர்தலுக்கு முன்னர் 'கஜானா காலி' என்று சொல்லி வாக்கு சேகரித்த போது நிதி நிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை? வருவாயை பெருக்கும் வேறு எந்த திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில், மது விற்பனையை அதிகரிப்பதன் மூலமே வருவாய் அதிகரித்து நிதி நிலை சரியாகிறது. 'குடி குடியை கெடுக்கும்' என்ற வாசகம் கொண்ட 'சரக்கை' அதிகம் விற்று பலரின் 'விதி' யை முடித்து, குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு  ரூபாய் 1000/- தேவையா? ரூபாய் 1000/- திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப்படுத்துங்கள். பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும் என நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு.. வெல்லப்போவது யார்..? உச்சகட்ட அலர்டில் ஓபிஎஸ்- இபிஎஸ்

click me!