அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ஸ்.. அசால்டாக தப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!

By vinoth kumar  |  First Published Sep 2, 2022, 7:16 AM IST

அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தவர். 


சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தவர். போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ..? யார் அந்த 3 பேர்..? அதிர்ச்சியில் இபிஎஸ்

undefined

இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்ட சிலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கத்துறை கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க;-  அதிமுக அலுவலகம் இபிஎஸ் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டிலே நான் திருடுவேனா? திருப்பி அடிக்க ஆரம்பித்த ஓபிஎஸ்.!

click me!