அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்... இபிஎஸ் கடிதத்திற்கு ஓகே சொன்ன வங்கிகள்!!

By Narendran S  |  First Published Jul 20, 2022, 12:05 AM IST

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதியிருந்த கடித்தத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதியிருந்த கடித்தத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையை வானகரத்தில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் புதிய அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிமுக வங்கி கணக்குகள் உள்ள கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்து மாஸ் காட்டிய எடப்பாடி.. அல்லு தெறிக்கும் திமுக.

Tap to resize

Latest Videos

மேலும் அதில், அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்றும், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் எழுதிய கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுங்க.. அதிமுக சார்பில் ஸ்டாலினை கேட்கும் ஓ. பன்னீர்செல்வம்!

நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

click me!