பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியை விடுவிக்க முடியாது…சுப்ரீம் கோர்ட் அதிரடி..

First Published Mar 7, 2017, 7:19 AM IST
Highlights
Babri masjith issue


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியை விடுவிக்க முடியாது…சுப்ரீம் கோர்ட் அதிரடி..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து  எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி , உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த வழக்கு வரும் 22 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றச் சதியில் ஈடுபட்டதாக பா.ஜ.க. தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான ,கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி சிறப்பு  நீதிமன்றம் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 13 பேரை விடுவித்தது. இதை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் உச்சநிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட 13 பேர் தொழில் நுட்ப காரணங்களுக்காக மட்டுமே விடுவிக்கப்பட்டு உள்ளனர்  என்றும் இதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

 

click me!