தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ.500கோடியே 1 ரூபாய் நஷ்ட வழங்க வேண்டும் என்று அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில், அவரின் வழக்கறிஞர் ஆர்.சி பால்கனகராஜன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் “ கடந்த 14-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினீர்கள். அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஆருத்ரா நிறுவன முறைகேடு தொடர்பாக பேசும் போது, பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ரூ.84 கோடி நேரடியாக பெற்றதாக கூறினீர்கள். ஆனால் அதுபற்றி வேறு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அண்ணாமலைக்கு யார் பணம் கொடுத்தது..? அவரின் ஆதரவாளர்கள் யார் போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க : ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 13 வயதுகூட ஆகாததால் நடவடிக்கை!
undefined
இந்த தகவல் பாஜகவை சேர்ந்த சிலர் மற்றும் பொதுமக்கள் கூற உங்களுக்கு தெரியவந்ததாகவும், இதனால் தான் பாஜக அலுவலகத்திற்கு வெளியே பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தியதாகவும் கூறினீர்கள். இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானது. திமுகவை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய அண்ணாமலைக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உங்கள் கட்சியில் உள்ளவர்களை போது இல்லாமல், அரசியலில் உயரிய கொள்கைகளையும் நன்னெறிகளை பின்பற்றுபவர் அண்ணாமலை. அவருக்கு ஆருத்ரா முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகவும், பணம் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனவே இதுதொடர்பாக நீங்கள் கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க தவறும்பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இல்லையெனில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பிய விவகாரத்தில் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆன்லைன் மோசடியில் 12 லட்சத்தை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..