கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை.. 48 மணி நேரம் தான் டைம்.. அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்..!

By vinoth kumar  |  First Published Apr 29, 2023, 2:14 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. சொத்து மதிப்புகளையும் வெளியிட்டிருந்தார்.


திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் தற்போது எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. சொத்து மதிப்புகளையும் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி 15 நாட்களுக்குள் அண்ணாமலை ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.

Latest Videos

undefined

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தரப்பில் இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், கலைஞர் டிவியில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ரூ. 800 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறிய புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை. அவதூறு பரப்பியது தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவதூறு வீடியோவை சமூகவலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்டதற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!