குடியுரிமை சட்டத்தில் மக்கள் மனநிலையை நிறைவேற்றுங்க..! விழா மேடையில் முதல்வரை அதிரவைத்த எம்.எல்.ஏ..!

By Manikandan S R SFirst Published Mar 8, 2020, 5:49 PM IST
Highlights

விழா முடிந்த பிறகு மேடையில் முதல்வரை சந்தித்த அன்சாரி கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நேரில் வழங்கினார்.

நேற்று நாகப்பட்டினம் ஒரத்தூரில் ரூ.366 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நாகைக்கு வருகை வந்தனர். மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதல்வர், நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அக்கோரிக்கை விரைவாக, துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் பங்கேற்ற இவ்விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் கலந்து கொண்டார். விழா முடிந்த பிறகு மேடையில் முதல்வரை சந்தித்த அன்சாரி கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நேரில் வழங்கினார்.

'பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..!

அப்போது முதல்வரிடம் பேசிய அன்சாரி தமிழக மக்களின் மன நிலையை மதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தீர்மான நகலை பெற்றுக்கொண்ட முதல்வர் அதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். அன்சாரியுடன் நாகை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் மஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பேருலகு சமைக்க பெண்ணினமே எழு..! மகளிரை மெச்சிய மு.க.ஸ்டாலின்..!

click me!