பாண்டே சொன்னதெல்லாம் பொய்... ஒரே போடாய் போட்டுடைத்த ரஜினி மாவட்ட செயலாளர்..!

By vinoth kumarFirst Published Mar 8, 2020, 5:28 PM IST
Highlights

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும். முக்கியமாக ஒருவேளை ஆட்சிப் பொறுப்பேற்கும் சூழல் வந்தால், தாம் முதல்வராக மாட்டேன் என்றும் கட்சித் தலைவராக மட்டுமே செயல்படப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்சியைச் சேர்ந்த மற்றொருவர் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எனவும் ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்தார். 

தனது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்கும் சூழல் வந்தால் முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்றும், கட்சியைச் சேர்ந்த வேறொருவர் அப்பொறுப்பை வகிப்பார் என்று ரங்கராஜ் பாண்டே கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு ரஜினி மாவட்ட நிர்வாகி சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னையில் மார்ச் 5-ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அம்மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன பேசினர் என்பது குறித்து சாணக்கியா யூடியூப் சேனல் ஆசிரியரான ரங்கராஜ் பாண்டே கூறுகையில்;- மாவட்ட நிர்வாகிகளிடம் 3 கேள்விகளை நடிகர் ரஜினிகாந்த எழுப்பியதாக கூறியுள்ளார். கட்சியில் இருக்கக்கூடிய தேவையற்ற பதவிகள், ஊழலுக்கு துணை போகக்கூடிய தேவையில்லாத கட்சிகள் பணிகள் அனைத்தும் அகற்ற வேண்டும். 

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும். முக்கியமாக ஒருவேளை ஆட்சிப் பொறுப்பேற்கும் சூழல் வந்தால், தாம் முதல்வராக மாட்டேன் என்றும் கட்சித் தலைவராக மட்டுமே செயல்படப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்சியைச் சேர்ந்த மற்றொருவர் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எனவும் ரஜினிகாந்த் கூறியதாக தெரிவித்தார். 

ரஜினி கட்சி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அவர் இல்லாமல் வேறு ஒருவரை முதல்வராக வைப்பதற்கு சம்மதமா என்று செயலாளர்களிடம் கேட்டதற்கு அவர்கள் 2 நிபந்தனைகளை மனபூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 3-வது கருத்தான முதலமைச்சர் விவகாரத்தில் ரஜினி கருத்து மறுப்பு தெரிவித்தனர். இதுதான் ரஜினிக்கு ஏமாற்றம் என்று கூறியதாக தகவல் தெரிவித்தார். ஆனால், இவரது கருத்துக்கு பல்வேறு ரஜினி மக்கள் மன்றத்தை நேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், ரங்கராஜ் பாண்டே கூறிய கருத்து தொடர்பாக நாமக்கல் மாவட்ட நிர்வாகி கூறுகையில்;- நாளை நமது கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் மன்றம் என்பது அப்படியே இருக்கும். கட்சியும் தனியாக இருக்கும். நான் கட்சியை ஆரம்பிப்பதற்கான காரணம் முதலமைச்சர் என்ற பதவிக்காக அல்ல. 1996-ம் ஆண்டிலேயே வாய்ப்பு கிடைத்த போதும் அதை புறக்கணித்தேன். 

தற்போது நாம் கட்சி ஆரம்பித்து ஆட்சியை மாற்றத்தை ஏற்படுத்தினால் நான் முதலமைச்சராக இருந்து தான் பண்ண வேண்டிய அவசியமில்லை. என்னை விட திறமையாக நிர்வாகம் பண்ணக்கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை முதல்வராக அமர்த்தி நிர்வாகம் செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது என்று தான் ரஜினி சொன்னாரே தவிர. இப்படி தான் பண்ணுவேன் ரஜினி சொல்லவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறினர். பதவிக்காகவோ, ஆட்சிக்காகவோ, அதிகாரத்திற்காவோ ரஜினிகாந்த இல்லை என்பதை நிரூபிப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையை மீயாவில் தவறாக திசை திருப்புகிறார் என தெரிவித்துள்ளார். 

click me!