’எத்தனை பெண்களைத்தான் ஏமாற்றினார்’ சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது பாலியல் பலாத்கார வழக்கு...

By Muthurama LingamFirst Published Mar 31, 2019, 11:20 AM IST
Highlights

சமூகச் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான செய்தியை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கில் சில தினங்களாக இன்னொரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பிருப்பதாகவும், அவரது தலைமறைவுக்கு அந்தத் தொடர்பு கூட காரணமாக இருக்கக்கூடும் என்று செய்திகள் வந்தன. ஆனால் அச்செய்தியை உறுதி செய்யும் வகையில் இன்னொரு பெண்ணும் முகிலன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

 முகிலனுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் காணாமல் அடிக்கப்படவில்லை. இன்னொரு பெண்ணுடன் தனக்கு இருக்கும் ரகசிய உறவு அம்பலத்துக்கு வந்துவிடாமல் இருக்க ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றொரு செய்தியும் நடமாடிக்கொண்டிருக்க, பிரச்சினையின் நாயகி இசை என்கிற ராஜேஸ்வரி தனது முகநூல் பக்கத்தில் முகிலன் குறித்த உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்திருந்தார். தன்னோடு மட்டுமன்றி மேலும் சில பெண்களுடம் முகிலனுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தேவைப்படும் சமயத்தில் அதுவும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்பதிவை ஒட்டி இசையிடம் சிபிசிஐடி போலீஸார் அவரிடம் பலமுறை விசாரணை நடத்தி வந்தனர், இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக  முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

சமூக போராட்டங்களில் ஒன்றாக பங்கேற்ற போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி முகிலன் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக , அவருடன் போராட்டங்களில் கலந்துகொண்ட பெண், குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் முகிலன் மீது  ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.முகிலன் பிப்ரவரி 15 -ஆம் தேதி காணாமல்போன நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!