டூ ஆர் டை தேர்தல்..! திமுகவிற்கு முடிவுரை..! தமிழகத்தில் 25 எம்பிக்களை பெறுவதே இலக்கு - அண்ணாமலை உறுதி

By Ajmal Khan  |  First Published Dec 21, 2022, 2:52 PM IST

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என எங்களுக்கு தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். 
 


திமுகவின் 70 ஆண்டு கால ஊழல்

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி,  செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,  தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது. 2024 இல் 25 எம். பி. க்கள் கிடைப்பர்கள் என்பது இலக்கு. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திமுக ஊழல் செய்து வருகிறார்கள். தேர்தலில் பூத் கமிட்டி பிரதிநிதிகள்  சிறப்பாக செயலாற்ற வேண்டும். அவர்கள் தான் நமக்கான வாக்குகளை உறுதி செய்பவர்கள். கையில் இருக்கும் பணத்தை இழந்து கட்சியை வளர்த்து வருகிறோம். நமது போராட்டங்கள் நம்மை மக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கிறது.

Latest Videos

அதிமுகவை பிடித்துள்ள நோய் இபிஎஸ்..! கூவத்தூரில் நடந்தது என்ன.? விசாரணை கமிஷன் தேவை- மனோஜ் பாண்டியன்

25 எம்பிக்கள் இலக்கு

Do or die சூழலில் தமிழகத்தில் நாம் உள்ளோம். திமுகவிற்கு முடிவு கட்ட இந்த தலைமுறையால் முடியும். 2024 இல் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும். மக்கள் மனசு பாஜக பக்கம் திரும்பிவிட்டது. சூழ்நிலைகளை ஓட்டாக்க வேண்டும். 2024 இன் நிலை பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் பெரும்.  25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்கு..! அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

click me!