இபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்கு..! அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Dec 21, 2022, 2:13 PM IST

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தனது அதிகாரப்பூர்வு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 


ஒற்றை தலைமை மோதல்

ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி அதிமுக என பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவிற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக  நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்தநிலையில் அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் தான் அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வார். தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு, செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

அண்ணாமலை எதை வேண்டும் என்றாலும் வெளியிடட்டும்..! எதிர்கொள்ள தயார்..! இறங்கி அடிக்கும் சேகர் பாபு

அதிர்ச்சியில் ஓபிஎஸ்

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் அனுப்பிய ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. மேலும் வருமானவரி கணக்கும் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே செலுத்தப்பட்டு, அதன் நகலும் தேர்தல் ஆணையத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு இரண்டு தரப்பும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்குகளை ஏற்றுள்ளது ஓபிஎஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

அதிமுகவை பிடித்துள்ள நோய் இபிஎஸ்..! கூவத்தூரில் நடந்தது என்ன.? விசாரணை கமிஷன் தேவை- மனோஜ் பாண்டியன்

click me!