எடப்பாடி பழனிசாமியை தற்குறி என விமர்சித்த பண்ருட்டி ராமச்சந்திரன்?

By vinoth kumar  |  First Published Dec 21, 2022, 2:20 PM IST

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.


எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் இங்கு கூறியுள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்குள்ளவர்களுக்கு தான் உண்டு என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் அதிமுகவின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் நியமித்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இபிஎஸ் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு, செலவு கணக்கு..! அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

 மேலும் கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 88 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்;- அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார். 

காப்பியங்களில் செய்யுட்கள் வரும். அதை இயற்றியவர் ஆரம்பக்கால புலவராக இருப்பார். உதாரணத்துக்கு கம்பராமாயணத்தை எடுத்துகொள்வோம். உடனே இதை இயற்றியது சேக்கிழார் என்று அவசரப்பட்டு சொல்லிவிடாதீர்கள். இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் தற்குறிகள் இருப்பார்கள் என்று கருதியோ என்னவோ, ராமாணயத்தை ராமாயணம் என்று போடாமல் கம்பராமாயணம் என போட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்குள்ளவர்களுக்கு தான் உண்டு என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுகவை பிடித்துள்ள நோய் இபிஎஸ்..! கூவத்தூரில் நடந்தது என்ன.? விசாரணை கமிஷன் தேவை- மனோஜ் பாண்டியன்

click me!