2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
இதில் 19 மாநில பாஜக ஆளும் முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்களான அமித்ஷா, நிதின் கட்கரி ,வசுந்த்ரா ராஜே, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும், அங்கு எற்பட்டுள்ள ஊழல் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !
பிரதமர் மோடி உரை
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் தேசிய அளவிலான பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்றுள்ளனர். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?
பாஜக தலைவர் அண்ணாமலை
இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும், உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகத் திகழ்வது தமிழ் மொழிதான் என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்த நமது பாரத பிரதமர் திரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
— K.Annamalai (@annamalai_k)இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘அடிக்கடி வெளிப்படும் பிரதமர் மோடியின் தமிழன்பு, பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும், உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகத் திகழ்வது தமிழ் மொழிதான் என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்த நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?