வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லையில் பாதிப்பு என்ன.? ஆய்வு செய்ய அதிரடியாக குழு அமைத்த அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Dec 26, 2023, 11:17 AM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சேத விவரங்களை கண்டறிந்து அறிக்கை அளிக்கும் வகையில், குழுவை அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த குழுவினர் இன்று முதல் சேத விவரங்கள் தொடர்பாக அறிக்கையை தயாரிக்க உள்ளனர். 


தென் மாவட்ட வெள்ள பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் அந்த நகரங்கள் புரட்டிப்போடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.  இதனையடுத்து அப்பகுதி மக்களை பாதிப்பில் இருந்து மீட்க தமிழக அரசு சார்பாக நிவாரண நிதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

Tap to resize

Latest Videos

இதனிடையே தமிழக பாஜக சார்பாகவும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்க குழு ஒன்றை நியமித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உடனடியாக அறிக்கை சமர்பிக்க உத்தரவு

பாதிப்பின் தீவிரத்தை முழுமையாக ஆய்வு செய்து மாநிலத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திட பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவானது உடனடியாக ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 1. Dr.சசிகலா புஷ்பா, மாநில துணை தலைவர், 2. பொன்.பாலகணபதி , மாநில பொது செயலாளர், 3. K.நீலமுரளி யாதவ் மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி தெற்கு, 4. A.N.ராஜகண்ணன் மாவட்ட பார்வையாளர்,திருநெல்வேலி வடக்கு

5. R.சித்ராங்கதன் மாவட்டத் தலைவர்.தூத்துக்குடி தெற்கு, 6. வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்டத் தலைவர்.தூத்துக்குடி வடக்கு, 7. S.P.தமிழ்ச் செல்வன் மாவட்டத் தலைவர்,திருநெல்வேலி தெற்கு 8. A.தயாசங்கர் மாவட்டத் தலைவர்,திருநெல்வேலி வடக்கு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கிடைத்ததன் பின்னணி என்ன?

click me!