AIADMK: அதிமுக பொதுக்குழு கூட்டத்தால் விழாக்கோலம் கொண்டுள்ள வானகரம்; பழனிசாமியை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்

By Velmurugan s  |  First Published Dec 26, 2023, 10:55 AM IST

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பதால் சென்னை வானகரம் விழாக்கோலம் கொண்டுள்ளது.


அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் அழைப்பிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னரே கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் https://t.co/BMKL1VUIIL

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL)

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இக்கூட்டம் அதிமுகவினரிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வில் ஏ, பி, விண்ணப்பங்களில் கையொப்பமிடும் அதிகாரித்தை பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

click me!