விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஸ்டாலின்.! நம்ப வைத்து ஏமாற்றுவது தான் சமூக நீதியா.? அண்ணாமலை ஆவேசம்

By Ajmal KhanFirst Published Aug 18, 2022, 9:55 AM IST
Highlights

நரிக்குறவர் பெண்மணிக்கு லோன், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், திமுக அரசு விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

நரிக்குறவர்களுக்கு முதலமைச்சர் உதவி

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலா வரும் பயணிகளிடம் நரிக்குறவர்கள் ஊசி, பாசிமணி விற்று தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில்  அன்னதானம் சாப்பிடச் சென்றபோது நரிக்குறவர்களைவிரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நரிக்குறவர் பெண்மணி பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில்  இதனை பார்த்த தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதே கோயிலில் அந்த பெண்மணியோடு அன்னதானம் சாப்பிட்டார். இதனையடுத்து நரிக்குறவ பெண்மணியின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு சேகர்பாபு கொண்டு சென்றிருந்தார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 4.53 கோடி மதிப்பில் 283 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். 

லோனும் இல்லை, வீடும் கிடைக்கவில்லை..! முதலமைச்சர் வழங்கிய செக்கை காட்டி வேதனைப்படும் நரிக்குறவ பெண்

லோனும் இல்லை, வீடும் இல்லை

இதனையடுத்து அந்த நரிக்குறவர் பெண்மணி அஸ்வினி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லையென நரிக்குறவ இனத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நரிக்குறவர் பெண்மணி அஸ்வினி கூறுகையில், முதலமைச்சரே உங்கள் வீட்டிற்கு வந்தார்கள் நீ ஏன் மறுபடியும் ரோட்டில் ஊசி, பாசி விக்குறேனு நிறைய பேர் கேட்கிறார்கள். நீ எங்கையோ போயிருக்க வேண்டியது ஆச்சே என கூறுகிறார்கள். வந்த லோனும் வரவில்லை, வீடு கட்டி தாரேனு சொன்னாங்க அதுவும் இல்லை, பாத்ரூம் கட்ட செங்கல் எல்லாம் கொண்டு வந்தாங்க திரும்பவும் அந்த செங்கலை எடுத்துட்டு போயிட்டாங்கள், நம்பிக்கை முழுவதுமாக செத்து போச்சு என கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா ஒரு லட்சம் செக் கொடுத்தாங்கள்,  வங்கியின் பெயரையும் மேடையில் பெருமையாக கூறினார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் செக் அட்டையை திரும்ப கொண்டு போயிட்டாங்க, என வேதனையோடு தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்.. ஆளுநர் கிளப்பிய புது சர்ச்சை - மீண்டும் பரபரப்பு !

விளம்பரங்களில் மட்டும் ஆர்வம்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.  இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

மதவெறியில் நாட்டைத்துண்டாடும் பாஜக.! மானுடக்குலத்திற்கே பேராபத்து.. வெட்கித் தலைகுனியும் கொடுஞ்செயல் -சீமான்

 

click me!