அடுத்த பரபரப்பு! இந்த வழக்கிலாவது இபிஎஸ் சாதிப்பாரா? அல்லது மீண்டும் சறுக்குவாரா? ஓபிஎஸ் மனு இன்று விசாரணை.!

By vinoth kumarFirst Published Aug 18, 2022, 8:45 AM IST
Highlights

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உட்சபட்ச மோதல் ஏற்பட்டது. இதனையடுதத்து, கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உட்சபட்ச மோதல் ஏற்பட்டது. இதனையடுதத்து, கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார்.

இதையும் படிங்க;- [ஜெய]லலிதா + ராமச்[சந்திரன்] = ஜெயச்சந்திரன்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு குறித்து ஜெயபிரதீப் டுவீட் வைரல்.!

அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே வன்முறை வெடித்தது. இதையடுத்து சட்டம் -ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க;-  திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!