இபிஎஸ் கனவில் மண்ணைவாரி போட்டதற்கு இதுதான் காரணம்.. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதுதான்..!

By vinoth kumarFirst Published Aug 18, 2022, 7:21 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமான இந்த வழக்கில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமான இந்த வழக்கில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

தீர்ப்பு குறித்தத முக்கிய அம்சங்கள்

* பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற கட்சி சட்ட விதி உள்ளது. 

*  தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது.

*  சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5ல் 1 பகுதியினர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்குத்தான் கோரிக்கை வைக்க முடியும். ஆனால், இந்த கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லாத அவைத் தலைவருக்குதான் 5ல் 1 பகுதியினர் கடிதம் அனுப்பி உள்ளனர். 

*  ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால் கூட, சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்ட முடியாது. எனவே ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை.

*  ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை எனவும் அது கற்பனையானது. 

*  கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. 

*  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை.

*  மனுதாரர் ஓபிஎஸ், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். 

*  இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்விதம் புள்ளிவிவர அடிப்படையும் இல்லை.

*  ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது.

*  5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது.

*  இந்த பொதுக்குழுவை கூட்டுவதற்காக சட்ட ஆணையரை நியமிக்கும் பணி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!