ராமச்சந்திரன்.. ஜெயலலிதா.. ஜெயச்சந்திரன்.. அதிமுகவை காக்கும் ரூபங்கள்.. புல்லரிக்கும் ஓபிஎஸ் மகன்..!

By vinoth kumar  |  First Published Aug 18, 2022, 6:40 AM IST

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா எதோ ஒரு ரூபத்தில் அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.


எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா எதோ ஒரு ரூபத்தில் அதிமுகவையும், அதன் தொண்டர்களை காக்கும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என கூறியிருந்தார்.

Latest Videos

இதையும் படிங்க;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான்..! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், முழக்கங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுதத்தினர். இந்நிலையில், , ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. 

pic.twitter.com/uhM4mUcEqg

— Jayapradeep (@VPJayapradeep)

 

 

இதுதொடர்பாக ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- இதயதெய்வம் புரட்சிதலைவி [[ஜெய]]லலிதா அம்மா, இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ராமச்[[சந்திரன்]] ஐயா ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா எதோ ஒரு ரூபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் அதன் உண்மை தொண்டர்களையும் கண் இமை போல காப்பாற்றி, வழி நடத்தும் என்பதற்கு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர் ஐயா உயர்திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினால் நிரூபணம் ஆகியுள்ளது. வெற்றி நமதே!” என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிபதி தவறான தீர்ப்பை கொடுக்கவில்லை...! இபிஎஸ் ஆதரவாளர் கே பி முனுசாமி விளக்கம்

click me!