ஸ்டாலின்..! உங்களுக்கு தில் இருக்கா..? என் மேல கை வையுங்க.. வம்பிழுக்கும் அண்ணாமலை…

By manimegalai aFirst Published Nov 18, 2021, 7:37 AM IST
Highlights

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி உரை ஒளிப்பரப்பப்பட்ட விவகாரத்தில் தைரியம் இருந்தால் தமிழக அரசு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கூறி இருக்கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி உரை ஒளிப்பரப்பப்பட்ட விவகாரத்தில் தைரியம் இருந்தால் தமிழக அரசு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கூறி இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது மழை, வெள்ளக்காலம்… அரசியல் கட்சிகள் படையான அணி திரண்டு மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அப்படியே ஆளுங்கட்சி அப்படி பண்ணவில்லை…? இப்படி செய்துவிட்டார்கள் என்று குற்றப்பத்திரிக்கையை வாசித்து தள்ளி வருகின்றனர்.

அதிலும் தற்போது லீடிங்கில் இருப்பது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. எந்த பிரச்னை என்றாலும் எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அறிக்கை, பேச்சு, பேட்டி என்று அதிரடி காட்டுகிறார். சென்னை மழை, வெள்ளத்தில் படகில் பயணம், கடலூரில் டிராக்டரில் வலம் என மக்கள் மத்தியில் அறியப்படும் தலைவராக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பப்பட்ட சம்பவத்தில் தைரியம் இருந்தால் தம் மீது வழக்கு போடுமாறு தமிழக அரசுக்கு பதிலடி தந்திருக்கிறார். மழை, வெள்ளத்தால் கடும் சேதத்தையும், பாதிப்பையும் சந்தித்து இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளின் எதிரொலியாக பாதிக்கப்பட்ட விவசாயிளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இப்போது பதவியில் இருக்கும் இதே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் கடும் சேதம் ஏற்பட்டது. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு கருத்தையும், முதல்வர் ஆன பிறகு ஒரு செயலையும் அவர் செய்கிறார். இதை முதல்வர் எப்படி பார்க்கிறார் என்றே தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு செல்வது ஒரு டுரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி இருக்கிறது.

தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000 ரூபாய் அண்ணாமலை கொடுக்க வேண்டும் என்கிறார். சேதங்கள் பற்றி குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு நிதி அளிக்கும்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்கு போடுவது சரியல்ல. தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த இருக்கிறது. அதேபோன்று மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாய் நிவாரணம் அளிக்க கோரி வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை கூறினார்.

click me!