ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆளைகடிக்கும் அண்ணாமலை... நம்மவரை அமெரிக்காவில் அசிங்கப்படுத்துவியா. மநீம.

By Ezhilarasan Babu  |  First Published Oct 12, 2022, 12:54 PM IST

வரலாற்று உண்மையை சொன்ன மக்கள் நீதி மய்யம் தலைவரை அண்ணாமலை அமெரிக்காவில் போய் விமர்சிக்கலாமா என மக்கள் நீதி மய்யத்தின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் கண்டித்துள்ளார்.


வரலாற்று உண்மையை சொன்ன மக்கள் நீதி மய்யம் தலைவரை அண்ணாமலை அமெரிக்காவில் போய் விமர்சிக்கலாமா என மக்கள் நீதி மய்யத்தின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைகடிக்க முனையும் அண்ணாமலை என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுகளில் ஒன்றை  அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொளி ஒன்றை காண நேர்ந்தது.  வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கி தள்ளலாம் என்று பார்த்தால் அவர் பேசியது நம்மவரைப்பற்றி.  ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளை கடிப்பது போல் இப்போது நம்மவரை கடித்து குதற முனைந்திருக்கிறார். நம்மவர் அவர்கள் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ்ஏஞ்சல்ஸ் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:   திருப்பதியில் இந்த தினங்களில் அனைத்து தரிசனமும் ரத்து.. 12 மணி நேரம் கோவில் மூடல்.. என்ன காரணம் தெரியுமா..?

நம்மவரின்  லாஸ் ஏஞ்சல்ஸ் பயணத்தைப் பற்றி இவர் கலிபோர்னியாவில் இருந்து பேசுகிறார். கலிபோர்னியா எங்கே இருக்கிறது, நாமக்கலிற்கும் கரூருக்கும் இடையிலான இருக்கிறது. அதே அமெரிக்காவில் போய் அரசியல் பேசும் இவர் நம்மவரை கேலி செய்கிறார். தான் சம்பாதிக்க ஒரு தொழிலை வைத்துக்கொண்டு மக்களுக்காக பாடுபடும் நம்மவரை அரசியலில் சம்பாதிப்பவர் கேலி பேசுவது புதிதல்ல, எனவே அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதும் இல்லை, ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்பட காட்சி  ஒன்றின் நேர்காணலில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நம்மவர் ஒரு வரலாற்று உண்மையை கூறினார்.

இதையும் படியுங்கள்:   அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.!

அதுவும், காஞ்சி பெரியவர் சொன்ன உண்மையை,  சோ அவர்கள் ஒப்புக்கொண்ட உண்மையை,  அண்மையில் இவரது கட்சியில் இருக்கும் சுப்பிரமணியசாமி  வழிமொழிந்த உண்மையை தான் என் தலைவர் கூறினார், அதையெல்லாம் மறுக்க திராணியற்ற அண்ணாமலை எங்கள் தலைவர் மீது பாய்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சைத் தொடர்ந்து பேசுவாரேயானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து அவர் ஏற்கனவே சொன்னபடி ஆடுமேய்க்கும் தொழிலுக்கு தான் போக வேண்டும்.

ஒரு நேர்மையான அரசியலை கொண்டு வர முயலும் நம்மவரை குற்றம் சொல்லும் தகுதி தனக்கு இல்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவல் அதிகாரி என்ற கௌரவத்திற்கு பங்கம் வராமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு முரளி அப்பாஸ் மாநிலச் செயலாளர், ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு,  மக்கள் நீதி மையம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!