தலையை வெட்டி தோரணம் தொங்கவிடுவோம்... சிவி சண்முகத்திற்கு நேருக்கு நேர் கொலை மிரட்டல்.. கதறும் வழக்கறிஞர்.

Published : Oct 12, 2022, 11:19 AM ISTUpdated : Oct 12, 2022, 12:03 PM IST
தலையை வெட்டி தோரணம் தொங்கவிடுவோம்... சிவி சண்முகத்திற்கு நேருக்கு நேர் கொலை மிரட்டல்.. கதறும் வழக்கறிஞர்.

சுருக்கம்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்திற்கு வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்திற்கு வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிவி சண்முகத்தின் சார்பில் அவரது வழக்கறிஞர் இப்புகாரை கொடுத்துள்ளனர்.

அதிமுகவில் கடந்த பத்தாண்டுகள் அமைச்சராக இருந்தவர் சி.வி சண்முகம். தற்போது அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். எவரையும் எடுத்தெறிந்து பேசக்கூடியவர் சி.வி சண்முகம் என்ற  பெயர் அவருக்கு உள்ளது. இந்நிலையில் அவரது வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். 

இதையும் படியுங்கள்:  திறமையற்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின்..! அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை - இபிஎஸ்

அதில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் அவர்களை சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சக்திவேல் என்பவர் தொடர்ந்து குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கால் மூலமாக கொலை செய்துவிடுவதாக  மிரட்டல் விடுத்து அதை அவர் சமூகவலைதளத்தில் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். சக்திவேல் வெளியிட்டு வரும் ஒவ்வொரு வீடியோவிலும், சீவி சண்முகத்தை மிகவும் தரக்குறைவாக பேசி, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சிவி சண்முகத்தை ஆபாசமாகவும் தரக்குறைவாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: நெருக்கடியில் எடப்பாடியாரின் வலது கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

இந்த வீடியோவால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து உள்ளது, எனவே அவருக்கு இப்போது பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவி சண்முகத்திற்கு ரவுடிகள் மற்றும் சில குண்டர்கள் அவரின் தனிப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் கொலை மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பு வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே  கொடுக்கப்பட்ட புகாரின் விழுப்புரம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்தின் தலையை வெட்டி தோரணம் கட்டி தொங்க விடுவோம் என கொலை மிரட்டல், குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் பாலமுருகன் குற்றம்சாட்டினார்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!