அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.!

Published : Oct 12, 2022, 12:42 PM ISTUpdated : Oct 12, 2022, 12:44 PM IST
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.!

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இதையும் படிங்க;- நெருக்கடியில் எடப்பாடியாரின் வலது கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளேன். இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட (3, 4, 5, 6, 7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சூரிய மூர்த்தி, ஆங்கிலத்தில் உள்ள சில தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து படிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீண்ட அவகாசம் கேட்கக்கூடாது என மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க;-  எடப்பாடி கோட்டையில் நுழைந்து கெத்து காட்டும் ஓபிஎஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!