ஸ்டாலின், வைகோவின் பழைய வண்டவாளங்களை நோண்டும் அன்புமணி... கலாய்த்தாலே நெத்தியடி ரிப்ளை...

By sathish kFirst Published Feb 24, 2019, 6:16 PM IST
Highlights

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதித்தாலும் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை, அதிமுகவுடன் கூட்டணி வைத்தல் XXX உடன் உடலுறவு வைப்பதற்கு சமம் என நாக்கு கூசும் வகையில் பேசிய பாமக இப்போது அதிமுகவுடன்,  கூட்டணி சேர்ந்ததை விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு, பதிலடி கொடுக்க, அன்புமணி திட்டமிட்டு உள்ளார். 

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதித்தாலும் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை, அதிமுகவுடன் கூட்டணி வைத்தல் XXX உடன் உடலுறவு வைப்பதற்கு சமம் என நாக்கு கூசும் வகையில் பேசிய பாமக இப்போது அதிமுகவுடன்,  கூட்டணி சேர்ந்ததை விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு, பதிலடி கொடுக்க, அன்புமணி திட்டமிட்டு உள்ளார். 

அதிமுகவுடன், பாமக கூட்டணி சேர்ந்ததை விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு, பதிலடி கொடுக்க, அன்புமணி திட்டமிட்டு உள்ளார். இது குறித்து, பாமக வட்டாரத்தில்; ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்த, 2016 சட்டசபை தேர்தலில், பாமக தனித்து போட்டியிட்டது. அக்கட்சியின் இளைஞரணி தலைவர், அன்புமணி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியாற்றினார். 

தீவிர பிரசாரம் கட்சிக்கு செல்வாக்கு உள்ள, வட மாவட்டங்களில், ராமதாசும், அன்புமணியும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இறுதியில், அன்புமணி உட்பட, ஒரு தொகுதியிலும், பாமக வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின், அன்புமணியும், ராமதாசும், அதிமுக அரசுக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.சேலம் எட்டு வழிச்சாலை, 'நீட்' தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பொதுக்கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி, முதல்வர், அமைச்சர்களை, கடுமையாக விமர்சித்தார்.'வரும் தேர்தல்களில், இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்றும் தெரிவித்தார். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், லட்டு மாதிரி 7 தொகுதிகளில்  போட்டியிடுவதற்கு, அதிமுகவுடன், பாமக ஒப்பந்தம் செய்துள்ளது.

இதை விமர்சித்து, சமூக வலைதளங்களில், பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதன் பின்னணியில், திமுக இருப்பதாக, பாமக கருதுகிறது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அன்புமணி, இன்று, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன் என்று விளக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், கருணாநிதி, ஸ்டாலினை விமர்சித்து, வைகோ பேசியது, காங்கிரசை விமர்சித்து, ஸ்டாலின் பேசிய தகவல்களை, திரட்டி வருகிறார் என இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

click me!