பாமக ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களை 5 ஆண்டுகளில் செய்து முடிப்போம்- அன்புமணி உறுதி

By Ajmal Khan  |  First Published Jul 17, 2023, 8:11 AM IST

 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று திமுக கூறியது.ஆனால் மது கடைகளை இதுவரைக்கும் மூட வில்லை, அண்ணாவின் நோக்கம் மதுவை ஒழிப்பது தான். ஆனால் திமுக அதை நிறைவேற்றவில்லையென அன்புமணி தெரிவித்துள்ளார். 


பாமக 35வது ஆண்டு விழா

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக முதலில் குறைவானஇளைஞர்கள் கொண்டு கட்சி தொடங்கப்பட்டது. இன்று பெரிய கட்சியாக உள்ளது. இன்று எனக்கு தீபாவளி,பொங்கல்,ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லா திருநாளும் ஒரே நாள் வந்தது போல் இருக்கிறது.  பட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் இன்று 108 ஆம்புலன்ஸ் இல்லை. ஆம்புலன்ஸ் இல்லை என்றால் பல்வேறு குழந்தைகள், பொது மக்கள் என உயிரிழந்திருப்பார்கள். பல்வேறு உயிர்களை காப்பாற்றி இருப்பது எங்கள் கட்சி என தெரிவித்தார்.  

Latest Videos

undefined

மதுவை ஒழிக்காதது ஏன்.?

பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் அடித்தர மக்கள் படித்திருக்க முடியாது. எங்கள் கட்சி இல்லை என்றால் முஸ்லீம் இனம் மக்களுக்கு 3.5  உள் ஒதுக்கீடு இல்லை. பாமக கட்சி இல்லை என்றால் சமச்சீர் கல்வி மற்றும் தேசிய சுகாதார திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று கூறினார்கள், திமுக ஆனால் மது கடைகளை இதுவரைக்கும் மூட வில்லை, அண்ணாவின் நோக்கம் மதுவை ஒழிப்பது தான். ஆனால் திமுக அதை நிறைவேற்றவில்லை. அண்ணாவின் நோக்கமான மதுவை எதிர்ப்பதை இதுவரைக்கும் பாமக கட்சி தான் செயல்படுத்தி வருகிறது.

வேற எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.  நானும் என்னனுடைய அப்பா மருத்துவரும் தினமும் மது கடையை எப்பப்பொழுது மூட போறீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தோம். அதனால் தான் அரசு தற்போது 500 கடைகள் மூடினார்கள். மதுவால் தற்போது வரை மூன்று தலைமுறைகள் அழிந்துள்ளது. நான்காவது தலைமுறையை அழிக்க விடமாட்டேம் அதற்கு தான் போராடி வருகிறோம். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடைய அப்பா குமரி ஆனந்தன் என்னுடன் தொலைபேசி மூலம் மதுவை உங்களால் மட்டும் தான் ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மதுவிலக்கு என்றால் மனதில் வருவது பாமக

பாமக கட்சி ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களை ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்போம். திமுக அரசு மணல் திருடுவதை நோக்கமாக செய்து வருகிறது. அதனால் தான் தடுப்பனை கட்ட மறுக்கின்றனர். பாமக கட்சி ஆட்சிக்கு வந்தால் எல்லா ஏரிகளிலும் தடுப்பணை கட்டுவோம். மதுவிலக்கு என்றால் மனதில் வருவது பாமக கட்சிதான். நீர் பாசன வசதி குறைந்து வருவதால் விவசாய நிலம் குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு உணவு கிடைக்காமல் வெளிமாநிலங்கள் உணவு தேடும் நிலை உருவாகும். விவசாயம் அதிகம் உள்ள மாநிலமாக மத்திய பிரதேஷ் திகழ்ந்து வருகிறது. பொது சிவில் சட்டம் என்பது தற்போது நிலைக்கு தேவையில்லாத சட்டம், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் இந்தியாவில் ஒற்றுமைகள் சிதைக்கப்படும் என அன்புமணி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன.? சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யவா.? கேஎஸ். அழகிரி கேள்வி

click me!