வாய் உள்ளது என்பதற்காகவும், டெல்லியில் உங்களுக்கு அதிகாரம் இருப்பது என்பதற்காக, யாரை பற்றி வேண்டும் என்றாலும் பேசலாமா?, அரசியல் தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள் இதில் நாகரிகம் மற்றும் பண்பாடு உள்ளதா என கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பினார்.
வெளிநாடு செல்லும் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு இலங்கைக்கு 3 நாட்கள் பயணம் செய்த அண்ணாமலை அங்கு இலங்கை தமிழர்களை சந்தித்து உரையாடினார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற அண்ணாமலை தனது Fellowship படிப்பு காரணங்களுக்காக அப்போது 2 வாரம் அங்கு தங்கியிருந்தார்.அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்தித்து பாஜக அரசின் சாதனைகள் மற்றும் மோடியின் மக்கள் பணிகளை பற்றி பேசினார். இதனையடுத்து கடந்த ஜூன் 22ஆம் தேதி லண்டன் சென்றார். அங்கு 8 நாட்கள் பயணம் செய்தவர் லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்தார்.
அண்ணாமலை வெளிநாடு செல்வது ஏன்.?
இதனையடுத்து அண்ணாமலை தென்ஆப்ரிக்காவிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, யார் மேல் யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாமா.? அதற்கு என்ன ஆதாராம் உள்ளது. வாய் உள்ளது என்பதற்காக டெல்லியில் உங்களுக்கு அதிகாரம் இருப்பது என்பதற்காக, யாரை பற்றி வேண்டும் என்றாலும் பேசலாமா, அரசியல் தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள் இதில் நாகரிகம் மற்றும் பண்பாடு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யவா.?
நீங்கள் அரசியல் பேசுங்கள், உங்கள் கொள்கையை பேசுங்கள், அரசியல் சனாதனத்தை பற்றி பேசுங்கள், ஆர்எஸ்எஸ் பற்றி பேசுங்கள், இதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஆனால் இதனை விட்டு விட்டு தனி மனிதனோட தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றி பேசுவதில் என்ன பொருள் உள்ளது. நான் சொல்கிறேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு செல்வதன் காரணம் என்ன.? இங்கிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கொண்டு சுவிஸ் வங்கியில் முதலீடு செய்கிறார். இது அரசியல் ஆகிவிடுமா என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
அமெரிக்கா, லண்டனை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவிற்கு பறக்கும் அண்ணாமலை..? எப்போது.? ஏன் தெரியுமா.?