நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை.! இது தான் காரணம் .? அன்புமணி கொடுத்த புதிய விளக்கம்

By Ajmal Khan  |  First Published Apr 2, 2024, 8:03 AM IST

57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர்களுடைய தேவை முடிந்துவிட்டது அவர்கள் காலாவதி ஆகிவிட்டார்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார். 
 


தமிழகத்தை நாசப்படுத்திவிட்டனர்

தேசிய ஜனநாயக கூட்டணியில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரத்தில்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், 57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முழுவதும் நான் சுற்றி வந்ததில், இவர்கள் இருவரும் போதும் என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த கூட்டணியை நாம் உருவாக்கி இருக்கிறோம். 

Tap to resize

Latest Videos

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்.?

சமூக நீதிக்கு போராடுபவர்கள் பாஜக கூட்டணி சேரலாமா என தமிழ்  தமிழ்நாடு முதலமைச்சர் கேள்வி கேட்கிறார் . காங்கிரசுக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது . கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸ்க்கும் என்ன சம்பந்தம் உள்ளது , வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து  கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது . சிவ சேனா கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் என்ன சம்பந்தம் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். எங்கே சென்றாலும் நாங்கள் கொள்கையே ஒரு எள் அளவு  விட்டுக் கொடுக்க மாட்டோம் . இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய தலைவராக மருத்துவர் ராமதாஸ் உள்ளார் என பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  1970 ஆண்டு இந்திரா அம்மையார் , கச்சத்தீவை தாராய் வார்த்து கொடுத்தார்கள் . 800 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் . நிச்சயம் மீட்டெடுக்க வேண்டும் உறுதியாக பிரதமர் மோடி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து மீட்டெடுக்க அழுத்தம் கொடுப்போம். 50 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்போம் என தெரிவித்து வருகிறார்கள் . கடந்த 50 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் திமுக ஆட்சியில் அங்கம் வகித்து வந்தது. ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை இப்பொழுது மட்டும் வசனம் பேசுகிறார்கள் என விமர்சித்தார். 

தேர்தலில் போட்டியிடாதது ஏன்.?

அதிமுக கூட்டணியிலிருந்து  பாமக வெளியேறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர்களுடைய தேவை முடிந்துவிட்டது அவர்கள் காலாவதி ஆகிவிட்டார்கள் . அவர்களால் புதிய திட்டங்கள் புதிய யோசனைகள் முன்வைக்க முடியாது தொலைநோக்கு பார்வை அவர்களுக்கு கிடையாது . அவர்களுடைய தொலைநோக்கு பார்வை அடுத்த தேர்தலுக்கு மட்டும் தான் என கூறினார். 

 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், எங்களுடைய நோக்கம் 2026 தேர்தலில் அதிமுக திமுக இல்லாத கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் . அடுத்த இரண்டு ஆண்டுகால முழுநேரம் நான் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் . போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நான் ராஜினாமா செய்ய வேண்டும் . மேலும் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய 40 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் , நான் போட்டியிடவில்லை என விளக்கம் அளித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத இபிஎஸ் எதுக்கு அதிமுகவிற்கு தலைமை ஏற்குறீங்க? வச்சு விளாசும் கே.சி.பழனிசாமி!

click me!