ஜெயலலிதாவின் அண்ணன் நான்.! சொத்தில் 50% பங்கு வேண்டும்-உயர் நீதிமன்றத்தில் முதியவர் தொடர்ந்த வழக்கால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Jan 31, 2023, 1:42 PM IST
Highlights

தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவி மகளான ஜெயலலிதாவின் சொத்துக்களில் பாதியை பெற தனக்கு உரிமை உள்ளதால், தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் நான்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நான் தான் ஜெயலலிதாவின் மகள், மகன் எனக்கூறிகொண்டு ஏராளமானோர் விளம்பரத்திற்கு தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்     மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் எனக் கூறி, கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த முதியவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ஜெயலலிதாவின் தந்தையான ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா என்றும், அவர்களின் ஒரே வாரிசு தான் மட்டுமே என்றும் மனுவில் கூறியுள்ளார். தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவியான வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இட நெருக்கடியால் அவதிப்படும் தலைமைச்செயலகம்.! ஓமந்தூராருக்கு மாற்ற திட்டம் போட்ட திமுக அரசு

சொத்தில் 50% பங்கு

ஜெயலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் தனது சகோதர சகோதரி என்றும், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டதால்,   சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடிவாரிசு என்பதால் தனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை பெற உரிமையுள்ளதாகக் அந்த மனுவில் கூறியுள்ளார். தான் உயிருடன் இருப்பதை மறைத்து ஜெயக்குமாரின் மகள் மகனான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்ததாகவும், அதனால் அவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்து 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமித்ஷாவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி..! ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த அண்ணாமலை

தீபா,தீபக் பதிலளிக்க உத்தரவு

காலதாமதாமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த மனு உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக பதிலளிக்கும்படி, தீபா,  தீபக்-க்குக்கு உத்தரவிட்ட மாஸ்டர் நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 10ம் தேதி தள்ளிவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

கடலில் பேனா நினைவுச் சின்னம்.! வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா.? பாஜக நிர்வாகியை தாக்க முயன்றதால் பரபரப்பு

click me!