கடலில் பேனா நினைவுச் சின்னம்.! வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா.? பாஜக நிர்வாகியை தாக்க முயன்றதால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Jan 31, 2023, 12:48 PM IST
Highlights

வள்ளுவருக்கு 133 அடியில் சிலை,  கருணாநிதி 137 அடியில் நினைவுசின்னமா என கேள்வி எழுப்பிய பாஜக நிர்வாகி முனுசாமியை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வெளியே அனுப்பிவைத்தனர்.

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டு கட்டி வருகிறது. இந்த நினைவிடம் அருகே உள்ள மெரினா கடலில், கருணாநிதியின் நினைவாக  ரூ.81 கோடி பேனா நினைவு சின்னம் அமைத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.

இட நெருக்கடியால் அவதிப்படும் தலைமைச்செயலகம்.! ஓமந்தூராருக்கு மாற்ற திட்டம் போட்ட திமுக அரசு

எதிர்ப்பு தெரிவித்த பாஜக

இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பாக பிரதிநிதிகள், மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி எம்சி முனுசாமி, கடலில் நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக  மீனவனாக கருத்தை பதிவு செய்கிறேன். நினைவு சின்னம் அமைப்பது மிகவும் அபத்தமானது.கடற்கரையை காக்கும் ஒரே சமுதாயம் மீனவர் சமுதாயம். கடற்கரையில் அண்ணா,எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா நினைவிடங்கள் உள்ளது. யாரும் கடற்கரைக்கு உள்ளே நினைவு சின்னம் அமைக்கவில்லை.  கருணாநிதி தான் 133 அடியில் வள்ளுவருக்கு சிலை வைத்தார். பேனா நினைவு சின்னம் 137 அடி,  வள்ளுவரை விட பெரியவரா கருணாநிதி என ஆவேசமாக பேசினார். 

ஜெயலலிதாவின் பொருளை ஏலம் விடுவதை போல் தமிழகத்தில் அதிமுகவை ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின் கிண்டல்

கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

அப்போது பாஜக நிர்வாகி முனுசாமியின் பேச்சுக்கு கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் முனுசாமியை தாக்க முற்பட்டனர். இதன் காரணமாக முனுசாமியை சூழ்ந்த போலீசார் பாதுகாப்பாக பாஜக நிர்வாகி முனுசாமியை வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழலை குறித்து மட்டுமே பேச வேண்டும். அரசியல் குறித்து பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய மே 17 அமைப்பை சேர்ந்த திருமுருகன் காந்தி பேசுகையில், நினைவு சின்னத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என்ற ரீதியில் பேசுவது தவறு.நினைவு சின்னம் தேவையா என்றால் தேவை தான். போராட்ட வரலாறுகள் நிறைந்தது தமிழ்நாடு. பல சின்னங்கள் இன்னும் உள்ளது.

மாற்று இடத்தில் நினைவு சின்னம்

ஆனால் இவை எதுவும் பாடத்திட்டத்தில் இல்லை என்பது வேதனை. புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் பாடத்திட்டத்தில் உள்ளது. திராவிட வரலாறுகள் பாடத்திட்டத்தில் இல்லை. பேனா நினைவு சின்னத்தில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு உள்ளது. பேனா சின்னம் தேவை தான் , ஆனால் கடலில் அமைப்பதில் உள்ள சிக்கல்களையும் பரிசீலிக்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை பேனா சின்னத்துடன் ஒப்பிடுவது தவறு. ஏற்கனவே இருந்த நிலப்பரப்பில் மீது தான் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய மீனவ பிரதிநிதிகள் கருணாநிதி நினைவாக அமைப்படும் பேனா நினைவு சின்னத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்

சென்னையே மூழ்க போகுது..! கருணாநிதிக்கு மெரினா கடலில் நினைவுச்சின்னமா..! கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்

click me!