தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களிலேயே கர்நாடகாவில் மாதம் 2000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டது ஏன் தமிழகத்தில் வழங்கப்படவில்லை. 30 மாதங்கள் கழித்து வழங்கப்பட உள்ள மகளிர் உரிமை தொகை அப்படியென்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 30 ஆயிரம் ரூபாய் கடன் பட்டுள்ளது தற்போதைய அரசு.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பாமல் தொண்டர்களை நம்பாமல் ஒரு கம்பெனி மூலம் தேர்தலை சந்தித்த ஒரே கட்சி திமுக தான் என முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏவும் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில்;- 2.5 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறி தற்போது 1 கோடி பேருக்கு தான் அத்தொகையை வழங்க உள்ளதாக திமுக அரசு சொல்கிறது. நிராகரிக்கப்பட்ட 1.5 கோடி பெண்களின் கோபத்திற்கு இனிமேல் தான் திமுக ஆளாகப் போகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பாமல் தொண்டர்களை நம்பாமல் ஒரு கம்பெனி மூலம் தேர்தலை சந்தித்த ஒரே கட்சி திமுக தான்.
undefined
இதையும் படிங்க;- முக்குலத்தோர் ஓட்டுக்கள் அதிமுக பக்கம் இருந்த காலம் போச்சு! பட்டியலின வாக்குளை கைக்குள் கொண்டு வரும் உதயநிதி.!
தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களிலேயே கர்நாடகாவில் மாதம் 2000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டது ஏன் தமிழகத்தில் வழங்கப்படவில்லை. 30 மாதங்கள் கழித்து வழங்கப்பட உள்ள மகளிர் உரிமை தொகை அப்படியென்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 30 ஆயிரம் ரூபாய் கடன் பட்டுள்ளது தற்போதைய அரசு. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தி வரும் சோதனை.. சோதனை எல்லாம் கண்டு அதிமுக அஞ்சப்போவதில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. திமுக ஆட்சியில் ரவுடிகள் சந்தோஷமாக உள்ளனர். டெல்லியில் அமித்ஷா எடப்பாடியார் சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தல் குறித்தும் முடிவு எடுக்க உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களே உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி பேச்சால் வட மாநிலங்களில் தேர்தலின் போது பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க;- ஜெயலலிதா பாணியில் இபிஎஸ்.. சொந்த தொகுதியிலேயே அதிரடி காட்டும் பொதுச்செயலாளர்..!
இப்போது தேர்தல் வந்தாலும் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். எனவே நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றியை நாம் அடைய வேண்டும் என்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.