டெல்லிக்கு புறப்பட்டு சென்ற எடப்பாடி..! எதற்காக செல்கிறார்.? யாரையெல்லாம் சந்திக்க போகிறார்.?

By Ajmal Khan  |  First Published Sep 14, 2023, 10:48 AM IST

பாஜக கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். 


அதிமுக- பாஜக கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்கு வைத்து களப்பணியை தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவைர  கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம், நீலகிரி, நெல்லை, தென்சென்னை, வேலூர், ஈரோடு, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளை குறிவைத்து பாஜக படுதீவிரமான பணிகளை மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக 9 தொகுதிகளை விட்டு கொடுக்குமா.? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

டெல்லி சென்ற எடப்பாடி

இந்தநிலையில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வியூகம், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு பின்பு அமித்ஷா மற்றும் ஜேபி நட்டாவை எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், சனாதன பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

பாஜக கேட்கும் தொகுதிகள் என்ன.?

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கும் தொகுதிகள் தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பாஜக தலைமை சார்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு கூடுதலாக கட்சிகள் வர இருப்பதால் தற்போதே தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்க முடியாது என கூறியிருந்தது. இந்தநிலையில் இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாஜகவினர் கேட்கும் தொகுதிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிமுக- பாஜக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

பொன்முடி வழக்கை நீங்க விசாரிக்க கூடாது!வேறு நீதிபதிக்கு மாத்துங்க!என்ன முடிவு எடுக்க போகிறார் ஆனந்த் வெங்கடேஷ்

click me!