குற்றவாளிகளை மதம் சார்ந்து பார்க்கக் கூடாது; இஸ்லாமிய அமைப்புகளுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

By Velmurugan s  |  First Published Jul 24, 2023, 6:37 AM IST

சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன் என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தமிழக பாஜக சார்பில் மாநகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் திமுக அரசை கண்டித்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்து வருவதாகவும், கோவை மாநகர பகுதிகளில் 100 இடங்களில் ஆர்பாட்டம் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Latest Videos

நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டி! மநீம துணைத் தலைவர் தங்கவேலு பேட்டி

தமிழகத்தில் அனைத்து துறைகளும்  ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்து வருகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் எல்லா துறைகளிலும் ஒரு ரேட் போட்டு பணிகள் நடந்து வருகின்றன. கோவை தெற்கு தொகுதியை குறி வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மக்கள் குறைகளை கேட்டு வருவதாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யார் வந்து மக்களுக்கான பணியை செய்தாலும் வரவேற்கிறோம். நாங்கள் மக்களுக்கான பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.

கோவை குண்டு வெடிப்பு, இந்து இயக்க சகோதரர்கள் படுகொலை போன்ற சம்பவங்களில் ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளதை அனைவரும் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு அந்த சமூகத்தவர்கள் ஆதரவு தெரிவித்தால் மீண்டும் அந்த செயலை தடுக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு மத சாயம் கொடுத்து அமைதியை கெடுக்க வேண்டாம். தீவிரவாதிகளை அந்த மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன். 

நீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தற்போதைய பாஜக தலைமை இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கவில்லை என்ற ஆர்.எஸ்.எஸ் கருத்து குறித்த கேள்விக்கு, அது வெறும் பத்திரிகை செய்தி மட்டுமே எனவும் அடுத்த 40 ஆண்டுகளை இலக்காக வைத்து 2, 3, 4 ம் கட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய கட்சியாக பாஜக உள்ளது என பதிலளித்தார்.

click me!