பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் மற்றும் மதுரை மாநாடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
அதிமுக ஆலோசனை கூட்டம்
அதிகார போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என 4 பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சட்டப்போராட்டம் நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தனது அதிகாரத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் மாநாடு நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இந்த மாநாட்டில் மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும் என்றும், தனது செல்வாக்கை வலுப்படுத்தும் மாநாடாக மதுரை மாநாடு இருக்கும் என இபிஎஸ் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.
undefined
மாநாடு ஏற்பாடுகள் என்ன.?
இதற்காக மாநாட்டை சிறப்பாக நடத்த பல சிறப்பு குழுக்களை முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இபிஎஸ் அமைத்துள்ளார். மேலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாகவும் குழு அமைத்து ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த கூட்டத்தில் மதுரை மாநாட்டிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும், வருகிற 18 ஆம் தேதி டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக கலந்து கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்
அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்... டாக்டர் சொன்னதால் நடை பயணம் போகிறார்- இறங்கி அடிக்கும் எஸ்.வி.சேகர்