மோடி & அமித்ஷா சந்திப்பு திருப்தி, அதுமட்டுமா ? எடப்பாடி டீமை அலறவைத்த ஓ.பன்னீர்செல்வம்

By Raghupati RFirst Published Nov 14, 2022, 9:44 PM IST
Highlights

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் சில தினங்களுக்குள் கிளைமாக்ஸ் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்திக்காமல் மதுரை விமான நிலையத்தில் ஒன்றாக வைத்து சந்தித்தார். எடப்பாடி தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பிலும் சரிசமமாக நிர்வாகிகள் பிரதமரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

அடுத்த நாள் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75ம் ஆண்டு விழாவுக்கு வருகை தந்தார் அமித்ஷா. அப்போது அந்த விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வமும் வந்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக இருந்தது. எங்கள் ஆதரவாளர்களுக்கு மனவருத்தம் இல்லை. மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசியது, என் அருகில் இருந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும்.

இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் மனவருத்தத்தில் இல்லை. அவர்கள் மனமகிழ்ச்சியாக உள்ளனர். அரசு சார்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க..பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

click me!