காங்கிரஸ் கட்சியை திமுக கழட்டி விட வாய்ப்புள்ளது.... பரபரப்பை கிளப்பிய டிடிவி தினகரன்!!

By Narendran S  |  First Published Nov 14, 2022, 9:15 PM IST

நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்தும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்தும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை எதிர்ப்பதற்காக வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம். திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். அதிமுக என்ற கட்சி இன்று செயல்படாத நிலையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக என்ற கட்சி பற்றி பேச எதுவும் இல்லை. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்க இருக்கும் தேர்தல். 2023 நவம்பர் டிசம்பரில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.அமமுக அணில் போல் செயல்பட்டு தேர்தலை சந்திப்போம். 10% இடஒதுக்கீடு விவகாரம் பொறுத்த வரையில் 69% இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.

இதையும் படிங்க: அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்... பாஜக மேலிட பொறுப்பாளர் அதிரடி!!

Tap to resize

Latest Videos

அம்மா பெற்று தந்த 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராமல் இருக்க அரசு பார்த்து கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சரி வர செயல்பட்டு மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசை குறை கூறுவதை விட இன்னும் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்ததை வரவேற்கிறோம். நீண்ட நாட்களாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது ஜனநாயக விரோத தவறான நடவடிக்கை. வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை பொறுத்த வரையில் 2023 நவம்பர் டிசம்பரில் முடிவு செய்யப்படும். திமுக காங்கிரசை கழட்டி விட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஆயிரம் ரூபாய்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் !!

மேலும் ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்து. ஆளுநர் சனாதனத்தை பற்றி பேச தேவையில்லை. ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தாலே இப்படித்தான் பேசுவார்களோ என எனக்கு தெரியவில்லை. யார் உண்மையான அதிமுக என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம். அனைத்து விஷயங்களிலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி என எதிர்த்து பேசுவது முறையானது அல்ல என்று தெரிவித்துள்ளார். 

click me!