முதல்வர் மு.க ஸ்டாலின் மீது புகார்.. எல்லாமே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் வந்த வினை !! அதிமுக Vs திமுக பரபர

By Raghupati R  |  First Published Mar 8, 2023, 9:56 AM IST

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மீது அதிரடியாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் இவர் மரணம் அடைந்தார். 

பிறகு இதையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக தரப்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிட்டார்.

Tap to resize

Latest Videos

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்தும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில், அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணி வேட்பாளர் கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் பார்க்கப்பட்டது. ஒன்று ஆளும் கட்சி செய்த செலவு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மகளிருக்கான 1000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்று அதிமுக புகார் கொடுத்துள்ளது.

இதையடுத்து அதிமுகவின் தேர்தல் பிரிவுதுணை செயலாளரும், வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை, தேர்தல் ஆணையத்துக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகார் அளித்துள்ளார். அதில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதிநடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்னதாக அதாவது பிப்ரவரி 25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது கூட்டணி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது, அவரது பேச்சில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் அதிகளவில் இருந்தன. அவர் தங்கள் கூட்டணி வேட்பாளருக்கு வாக்குகள் வரும் நோக்கில் சட்டவிரோதமாக வாக்காளர்களை கவரும் வகையில் பேசினார்.

இதில் முக்கியமாக, விரைவில்தமிழக அரசு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்திட்டத்தை அமல்படுத்தப்போவ தாக தெரிவித்துள்ளார். இது, முழுமையான தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும். அவர் இந்ததிட்டம் மார்ச் மாதத்தில் தாக்கலாகும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்பு தொடர்பாகஏற்கெனவே தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்ப வேண்டும். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதிமுகவின் இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க..எனக்கு ஒட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!!

click me!