தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரில், சொந்த வாக்கு சாவடியில் 23 ஓட்டுகளே வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், ஜெயலலிதா , கருணாநிதி போல் தானும் ஒரு தலைவர் என்று நீங்களே சொல்லி கொள்ள வெக்கமாக கூச்சமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காயத்ரி- அண்ணாமலை மோதல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு இல்லையென தெரிவித்த காயத்ரி ரகுராம், வார் ரூம் நடத்தி பாஜக மூத்த நிர்வாகிகள் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.இதனையடுத்து கட்சியில் இருந்து வெளியேறிய அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.
ஜெயலலிதா போல் நானும் தலைவன்
என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை நடத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில் அதிமுக- பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் இருந்து பெரும் தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் பொழுது எப்படி அந்த கட்சியின் தலைவர்கள் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முடிவு எடுத்தார்களோ அதே போல் நானும் ஒரு தலைவன். தலைவனாகவே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
சொந்த ஊரில் சொந்த பூத்தில் அண்ணாமலை 1000 ரூபாய் கொடுத்தும் வாங்கி ஓட்டு 23 மட்டுமே. எதிர்த்து போட்டியிட்ட முகம் தெரியாத திமுக வேட்பாளரும் செந்தில் பாலாஜியோட வலது கைக்கு வலது கையா இருந்த திமுக வேட்பாளர் வாங்கி ஓட்டு 582 அதாவது 96% வாக்கு வாங்கி அண்ணாமலையை வெறும் 3% மட்டுமே… https://t.co/4XLLu1gU1B pic.twitter.com/JPp8kSQasy
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram)
சொந்த தொகுதியில் அண்ணாமலை ஓட்டு.?
இந்த கருத்திற்கு பதில் அளித்து டுவிட்டரில் பதில் அளித்த காயத்ரி ரகுராம், சொந்த ஊரில் சொந்த பூத்தில் அண்ணாமலை 1000 ரூபாய் கொடுத்தும் வாங்கி ஓட்டு 23 மட்டுமே. எதிர்த்து போட்டியிட்ட முகம் தெரியாத திமுக வேட்பாளரும் செந்தில் பாலாஜியோட வலது கைக்கு வலது கையா இருந்த திமுக வேட்பாளர் வாங்கி ஓட்டு 582 அதாவது 96% வாக்கு வாங்கி அண்ணாமலையை வெறும் 3% மட்டுமே வாங்கும் அளவு தான் இவர் தகுதி. சொல்லுங்க அண்ணாமலை நீங்கள் ஜெயலலிதா , கருணாநிதி போல் ஒரு தலைவர் என்று நீங்களே சொல்லி கொள்ள வெக்கமாக கூச்சமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
Annamalai: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு