பாஜக செய்த செயலால் ஆத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி..! உடைகிறதா அதிமுக கூட்டணி..??

By Ajmal Khan  |  First Published Mar 8, 2023, 9:13 AM IST

அதிமுக- பாஜக நிர்வாகிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து மோதல் தற்போது போராட்டம் நடத்துகின்ற அளவிற்கு வளர்ந்துள்ளதால்,  நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஹாட்ரிக் வெற்றிக்கு திட்டமிடும் பாஜக

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் பத்தாம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வதற்காக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டிப்பாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய எம்பிக்களை வழங்க வேண்டும் என பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளது . தமிழகத்தில் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை இலக்காக வைத்து பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தனித்து போட்டியிட்டால் வெற்றியை பெற முடியாது என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து  நாடாளுமன்ற  மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி பாஜகவிற்கு கிடைக்கவில்லை.

Latest Videos

எடப்பாடி பழனிசாமியுடன் மோதல்.. திடீரென ஓபிஎஸ்ஐ சந்தித்த அண்ணாமலை..!

அதிமுகவை காத்திருக்க வைத்த பாஜக

அதே நேரத்தில் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று அதிமுகவினர் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் -பாஜக அலுவலகத்திற்கு வழிய சென்று ஆதரவு கோரியது. ஆனால் பாஜகவோ கடைசி நேரம் வரை தனது ஆதரவு தொடர்பாக எந்தவித நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருந்தது. இதன் காரணமாக ஈரோடு தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயரை அதிமுக நீக்கியது. இதனையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டது. இருந்த போதும் அதிமுகவிற்கு சிறுபான்மையின மக்களின் ஓட்டுகள் பெருமளவு கிடைக்காத காரணத்தால் அதிமுக 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு தேர்தலில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. 

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜகவினர் அதிமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அதிமுக- பாஜக கூட்டணியாக உள்ள நிலையில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து சிடிஆர் நிர்மல்குமார் அறிக்கை வெளியிட்டதும் பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!

உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!

விடைபெறுகிறேன் 🙏 pic.twitter.com/jcXAtJroid

— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar)

 

அதிமுக இதை செய்திருக்க கூடாது

இதனையடுத்து அதிமுகவை விமர்சித்து அண்ணாமலையின் வலது கரம் என அறியப்படும் அமர் பிரசாத் ரெட்டி "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என கூறியவர்கள் தற்போது 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்து இருந்தார்.

AIADMK being an alliance partner shouldn't have done this.

BJP under the leadership of Thalaivar will form government in Tamil Nadu.

— Amar Prasad Reddy (@amarprasadreddy)

 

நோட்டாவை விட குறைவான வாக்கு

இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த சிங்கை ராமசந்திரன் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கிவந்த நிலையில், 2021ல் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில்! அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே!

NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLAக்களை வென்றது என்பதே இதற்கான பதில்!

அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம்

நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே!

— Singai G Ramachandran (@RamaAIADMK)

 

பாஜக இலக்கை அடையுமா.?

என கூறியுள்ளார். இந்த கருத்து மோதலுக்கு மத்தியில் கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதியை இலக்காக வைத்து பாஜக செயல்பட்டு வந்த நிலையில், பாஜகவின் திட்டம் பலிக்குமா என்பதை கேள்விக்குறியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கிய கட்சி பாஜக! பிளாஷ்பேக்கை சொல்லி அண்ணாமலையை டேமேஜ் செய்த சிங்கை ராமசந்திரன்

click me!