ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்று அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக ஐடி பிரிவு செயலாளர் சிங்கை ராமசந்திரன் காட்டமாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்த நிலையில் அவருக்கு அதிமுக ஐடி பிரிவு செயலாளர் சிங்கை ராமசந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திராவிட கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமியுடன் மோதல்.. திடீரென ஓபிஎஸ்ஐ சந்தித்த அண்ணாமலை..!
இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்று அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக ஐடி பிரிவு செயலாளர் சிங்கை ராமசந்திரன் காட்டமாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணாமலையை அலறவிடும் அதிமுக.. நிர்மல் குமாரை தொடர்ந்து முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்..!
இதுதொடர்பாக அதிமுக ஐ.டி. அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் அவரது டுவிட்டர் பதிவில்;- நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கிவந்த நிலையில், 2021ல் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில்! அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே! என கூறியுள்ளார்.