சனாதன சக்தியை வீழ்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வட மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சனாதன சக்தியை வீழ்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வட மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. இப்போதே பாஜகவினர் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டில் தொடங்கி விட்டார்கள். பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் வதந்தி பரப்பினார்கள். எங்கோ நடந்த காட்சியை பீகார் தொழிலாளர்கள் தாக்குதல் காட்சி என்று பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். முதலமைச்சர் பிறந்த நாளில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கலந்து கொண்டார். எங்கே இவர்கள் ஒன்றிணைந்து விடவார்களோ என்று நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க: பீகார் முதல்வரை சந்தித்த டி.ஆர் பாலு… வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி குறித்து விளக்கம்!!
நித்திஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரசுடன் சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்தி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. சென்னையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரசுடன் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் சனாதனத்தை வீழ்த்த முடியும். மூன்றாவது அணி அர்த்தமில்லாதது, அது கரை சேராது என பேசினார். இதை விட வேறு என்ன பிரகடனம், அறை கூவல் தேவை? குமரி மாவட்டத்தை காலூன்றும் இடமாக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைப்பற்றி விடலாம் என நினைக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக வதந்தி பரப்பியதற்கு காரணம் இதுதான்... அமைச்சர் உதயநிதி அதிரடி!!
ஆனால் தற்போது அதிமுகவை வழிநடத்துகிற எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கிறார். மாபெரும் ஆபத்தான சக்தி தமிழகத்தில் காலூன்ற அதிமுக இடம் கொடுக்கிறது. திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை. 2024 இல் பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. எனவே சனாதன சக்தியை வீழ்த்த, ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகளை எல்லாம் சந்தித்து பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.