தங்களுக்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டும் என பேசியிருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தியை பரப்பி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களுக்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டும் என பேசியிருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தியை பரப்பி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், முதலமைச்சர் கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளில், தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டம் பல மாணவர்களுக்கு பயன் உள்ளதாக செயல்பட்டு வருகிறது. தற்போது போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புகின்றனர்... துரைமுருகன் குற்றச்சாட்டு!!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன பணியிடங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து பிரதமரை சந்தித்த போது கோரிக்கை வைத்தேன். அதற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் நான் முதல்வன் பயிற்சி திட்டம் உறுதுணையாக இருக்கும். வட மாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக பொய் செய்தியை பரப்பி வருகிறது.
இதையும் படிங்க: பீகார் முதல்வரை சந்தித்த டி.ஆர் பாலு… வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி குறித்து விளக்கம்!!
முதலமைச்சர் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பீகார் மாநில துணை முதல்வர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் தலைவர்கள், பாஜகவை வீழ்த்த வேண்டும், அதற்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என பேசியிருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தியை பரப்பி வருகிறது. பாஜக என்றாலே ஆடியோ, வீடியோ காட்சிதான். அதனால் தான் அந்த கட்சியில் இருப்பவர்கள் 420 கட்சி என்று சொல்லி கட்சியிலிருந்து வெளியே வருகிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.