ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புகின்றனர்... துரைமுருகன் குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published Mar 7, 2023, 5:39 PM IST

ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். 


ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது தொடரப்பட்ட பல திட்டங்கள் நிறைவடைவதற்கு முன்பே ஆட்சி மாறிவிட்டால், புதிய கட்சி ஆட்சி அமைக்கும் போது மக்களின் வரிப்பணத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட அந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுதான் மாண்பு. காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமில்லை. மத்திய அரசின் திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்ட வில்லை.

இதையும் படிங்க: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு

Tap to resize

Latest Videos

மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த  திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும். எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளும் கட்சியாக மாறும் போது ஏற்கனவே இருந்த கட்சி தொடக்கிய திட்டங்களை முடக்க கூடாது. அது ஜனநாயகம் அல்ல. அதனால் தான் அதிமுக தொடக்கிய திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தாமல் செயல்படுத்துகிறது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக தொடக்கிய திட்டங்களை முடக்கி விடும். ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக சர்ச்சையானது தற்போது கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: வடமாநிலத்தவர்களை நேரில் சந்தித்து தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்; தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது, ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை திசை திருப்பவும், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்பவும், சிலர் பரப்பிய சிறுபிள்ளைதனமான வதந்தி. திமுக ஒருபோதும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடாது, விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

click me!