எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு என்பது தான் திமுக - பழனிசாமி விமர்சனம்

By Velmurugan s  |  First Published Nov 18, 2023, 7:03 PM IST

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாட்டையும், ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கும் கட்சி தான் திமுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அரசின் தனி தீர்மானமானத்தில் ஆளுநர் 10 சட்ட முன் வடிவுகளுக்கு  அனுமதி வழங்காமல்  இருப்பதாக  அதில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆளுநர் திருப்பி அனுப்பிய பெரும்பாலான சட்ட முன்வடிவுகள் வேந்தர் நியமனம் குறித்ததுதான். அவையில் நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி அனுமதி அளிக்காததால் இது குறித்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது நடந்து வருகின்றது. 

வழக்கு நிலுவையில்  இருக்கும் போது அவசர அவசரமாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வுக்கு எடுத்து கொள்ள இந்த தனிதீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் எங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றோம். ஆளுநர் சட்ட முன்வடிவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பதை சுட்டிகாட்டி வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில், சிறப்பு சட்டமன்றத்தில்  விவாதம் நடத்த என்ன காரணம்? என கேள்வி எழுப்பிய அவர், சுயலாபத்திற்காக இந்த சட்ட முன்வடிவானது திமுக அரசால்  கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தால் இந்த கூட்டமே  அவசியம் கிடையாது. 1994 ஜனவரி மாதம் இதே கோரிக்கைக்காக அதிமுக அரசால் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டபோது திமுக என்ன நிலைப்பாடு எடுத்தது? அப்போது துணை வேந்தர் நியமனம் தொடர்பான சட்ட முன்வடிவு குறித்து பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகியோர் பேசி இருக்கின்றனர்.

ஆளுநரை டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் - வேல்முருகன் ஆலோசனை

அனைத்து பல்கலைகழகத்திலும் துணைவேந்தர் நியமனம் அரசால் செய்வது என்பது  ஜனநாயகத்தில்  ஏற்றுகொள்ள கூடிய நல்ல நோக்கமல்ல. திமுக தலைவர் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் 511 வது பக்கத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான  கருத்தை தெரிவித்துள்ளார். அதில் குடியரசு தலைவர் ஆட்சி நடந்தால் யார் வேந்தராக இருப்பார் என்றும் கலைஞர் எழுதியிருக்கிறார். சட்ட முன்வடிவுகள் குறித்து  ஆளும்கட்சியாக  ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என்று இருக்கும் கட்சி திமுக.

யாருயா நீ இந்த காட்டு காட்ற; வாயால் தேங்காய் உரித்து இந்தியில் அனுமாருடன் டீல் பேசும் இளைஞர்

ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இது தீர்மானம் கொண்டு  வரப்படுகின்றது. நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது. ஒ.பி.எஸ் திமுகவிற்கு சென்றுவிட்டார். அவர் சூடு, சொரணை இல்லாமல் பேசி வருகின்றார் என்றும் தெரிவித்தார். எங்கள் உடலில் அதிமுக ரத்தம்ஒடுகின்றது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

click me!