தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த திமுக தற்போது சனாதனம் ஒழிப்பு என்று பேசுவது வேடிக்கையாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சனாதன தர்மத்திற்குள் உள்ளே செல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. விலைவாசி, மின் கட்டணம் உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இப்பிரச்சனைகளை திசை திருப்ப சனாதனம் குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளனர்.
ராம்நாத் கோவிந்த், திரெளபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, திமுகவினர் எதிர்த்து வாக்களித்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனபால் சட்டப்பேரவை தலைவராக இருந்த போது திமுகவினர் அவரை இழிவுபடுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த திமுக சனாதன ஒழிப்பு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது.
திருவாரூரில் கொலை வழக்கில் ஆஜரான நபரின் தலையை சிதைத்து கொடூர கொலை; மர்ம கும்பல் வெறிச்செயல்
அதிமுக மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட கட்சி. உதயநிதி ஸ்டாலின் பேசும் போது தன்னை முன்னிலைப்படுத்த சனாதனத்தை பேசு பொருளாக்கி செய்த துரோக செயலை திசை திருப்ப பார்க்கிறார். தமிழகம் குட்டிச்சுவராக உள்ளது. நேற்று மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. ஊழலை மறைக்க திமுக நாடகமாடுகிறது. உதயநிதி அதிமுக பற்றி பேச வயது போதாது.
உதயநிதி என்ன சாதனை செய்துள்ளார்? கருணாநிதி பேரன். ஸ்டாலின் மகன் என்பதை தவிர அவருக்கு வேறு தகுதியில்லை. தமிழகத்தை ஆட்டி படைக்கப் பார்க்கிறார்கள். இது மன்னராட்சி கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம். திமுகவில் குடும்பத்தை தவிர வேறு யாரும் வர முடியாது. திமுக கட்சி அல்ல. கார்பரேட் கம்பெனி.
இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவி பலி; வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் சோகம்?
நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு அரசியல் காலம் முடிவு கட்டப்படும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதை சூழலுக்கு ஏற்ப தான் முடிவு செய்ய முடியும். தேர்தலை சந்திக்க முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்? சூப்பர் முதலமைச்சர் என்பவர் தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? ஏன் மக்களை சந்திக்க பயப்படுகிறார்?
திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை. எந்த சாதனையும் செய்யவில்லை. ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக உள்ளார் என குற்றம் சாட்டி உள்ளார்.