மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு என்பது புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சட்டமன்றம் எதிரே அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, இன்று ஆசிரியர் தினம். எனவே அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார்.
திருப்பூரில் மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்துவந்த போலி பெண் மருத்துவர் அதிரடி கைது
இதனை அடுத்து பாஜக சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள் சார்பில் வ. உ. சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.