AIADMK: அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் - யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.? டாப் 5 ட்விஸ்ட்ஸ் !!

By Raghupati R  |  First Published Feb 3, 2023, 5:45 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரண்டு அணிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றது.


ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், அதிமுவின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்த தேர்தல் ஆணையம்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்தது.  இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Tap to resize

Latest Videos

இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். இந்த பொதுக்குழு தீர்மானித்த வேட்பாளரை அதிமுக அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார் என உத்தரவிட்டுள்ளது.

இது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மட்டுமேயான ஒரு நடைமுறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஏற்கனவே 2022 ஜுன் 23, 2022 ஜூலை 11 பொதுக்குழு விவகாரங்களே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் புதியதாக ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழுவை கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழு கூட்டப்படுமா ? அல்லது பொதுக்குழுவை கூட்டாமலேயே இரு அணிகளும் மாற்று வியூகங்கள் வகுக்குமா ? என்பது வரும் நாட்களில் தெரியவரும். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் என்ன முடிவு எடுப்பார் என்றும் எதிர்பார்ப்பாக உள்ளது.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் நங்கள் முக்கிய உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவுசெய்யலாம். ஓ.பி.எஸ், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம். வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்ட முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க..AIADMK: ஓபிஎஸ் உடன் எடப்பாடி இணைய வேண்டும்.. அதிமுக வரலாற்றில் முதன் முறையாக..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

click me!