ஓபிஎஸ் வைத்த அந்த பாயிண்ட்... டோட்டலாக எடப்பாடிக்கு எதிராக மாறிய உச்சநீதிமன்றம் உத்தரவு..!

By vinoth kumarFirst Published Feb 3, 2023, 5:40 PM IST
Highlights

இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். 

இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் கட்சி விண்ணப்பத்தில் தான் கையெழுத்திட தயார் என கூறிய ஓபிஸ் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு  தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால், இரட்டை சின்னம் யாரும் யாருக்கு செல்லும். அல்லது முடங்க போகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு  ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி  நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 3 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து  ஓபிஎஸ் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இடைக்கால மனுவில் தீர்ப்பு வழங்கினால் அது பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் என தெரிவித்திருந்தார். 

அதேபோல், தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக இபிஎஸ் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும்  உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதா என நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. மேலும், அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. 

இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். வேட்பாளர் படிவத்தில் நான் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திடும் பட்சத்தில் நாங்கள் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். ஓபிஎஸ் கூறிய யோசனை நல்ல யோசனையாக இருக்கிறதே? இருதரப்பினர் பேசி முடிவெடுக்க வேண்டியதுதானே. அப்படியான சூழல் தானே இருக்கிறது நீதிபதிகள் கூறினர். இதற்கு இபிஎஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால், கடுப்பான நீதிபதிகள் நீதிமன்றம் கூறும் யோசனையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எச்சரித்தனர். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காகஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்து பெற ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்கலாம். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினர்.

click me!