அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது! ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு!டெல்லியில் சீறிய சி.வி.சண்முகம்

By vinoth kumarFirst Published Feb 3, 2023, 4:48 PM IST
Highlights

இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. அவர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

திமுக தனது குண்டர்களை வைத்து தொகுதியில் இல்லாத 45 ஆயிரம் வாக்களர்களின் வாக்குப்பதிவை செய்ய முயற்சி செய்து வருகிறது என  சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.வி.சண்முகம்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பிறகு 6 மாத காலம் அவகாசம் உள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த இடைத்தேதர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலிலுள்ள நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் அந்த பகுதியிலேயே இல்லை. தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்காக 6 வார்டுகளின்  முறைகேடு பட்டியலை அளித்துள்ளோம். 

இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. அவர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான  ஆட்சியர் தலைமையில்  தான் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகம் தெரிந்தே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. 

முறைகேடுகளை சரிசெய்யாவிட்டால் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறாது. தவறிழைத்த ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், திமுக அரசு சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக தனது குண்டர்களை வைத்து தொகுதியில் இல்லாத 45 ஆயிரம் வாக்களர்களின் வாக்குப்பதிவை செய்ய முயற்சி செய்து வருகிறது. 

திமுக அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் பணிகளில் பயன்படுத்தாமல் மத்திய காவல் படை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது. வேட்பாளரை அறிவித்துவிட்டோம், தேர்தலை சந்திக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

click me!